சென்னை - மொரீஷியஸ் இடையே விமான சேவை
சென்னை- மொரீஷியஸ் இடையே விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது.
சென்னை,
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு படிப்படியாக விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் சென்னையிலிருந்து மொரீஷியஸ் நாட்டிற்கு சில காரணங்களால் விமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே, மொரீஷியஸ் நாட்டிற்கு ஏப்ரல் மாதத்திலிருந்து விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து மொரீசியஸ் நாட்டிற்கு இன்று அதிகாலை முதல் விமானம் புறப்பட்டது. அதில் 173 பயணிகள் பயணித்தனர். சென்னை - மொரீஷியஸ் இடையேயான வாராந்திர விமான சேவையை ஏர் மொரீஷியஸ் நிறுவனம் இயக்குகிறது.
Related Tags :
Next Story