சென்னை : முதல்-அமைச்சர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!


சென்னை : முதல்-அமைச்சர் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
x
தினத்தந்தி 7 March 2023 12:30 PM IST (Updated: 7 March 2023 1:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 'எங்கள் முதல்-அமைச்சர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடைபெறும் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி, கடந்த 28ம் தேதி துவங்கியது.

இதை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திறந்து வைத்தார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கையின் பரிமாணங்களை விளக்கும் வகையில், பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

முதல் அமைச்சரின் சிறு வயது மற்றும் நடுத்தர வயது புகைப்படங்களின் முன் நின்று பெரும்பாலானோர் 'செல்பி' எடுக்கின்றனர். நாள்தோறும், பல்துறை சார்ந்த பிரபலங்களும், கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் அமைச்சரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். இதில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story