'சென்னையில் மிக கனமழை பெய்யும்'- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!


சென்னையில் மிக கனமழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
x
தினத்தந்தி 1 Dec 2023 1:52 PM IST (Updated: 1 Dec 2023 1:53 PM IST)
t-max-icont-min-icon

வருகிற 3-ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது 3-ந்தேதி புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என்று பெயரிடப்பட உள்ளது.

இந்த நிலையில், வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

"சென்னைக்கு 780 கி.மீ. தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் மையம் கொண்டுள்ளது. இது நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று, பின் புயலாக உருவாகவுள்ளது.

டிசம்பர் 3-ல் உருவாகும் புயல், 4-ம் தேதி மாலை சென்னை- மசூலிப்பட்டணம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வருகிற 3-ம் தேதி சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். 4-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் மிக கனமழை பெய்யும். அப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 70 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

அடுத்த 4 தினங்களுக்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வட தமிழக கடலோர பகுதி, மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story