சென்னை: மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகக்கூறி, ரூ.27 லட்சம் ஏமாற்றிய பெண் கைது
ரூ.27 லட்சம் வரை பணம் பெற்று ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைதுசெய்தனர்.
சென்னை,
சென்னை குரோம்பேட்டையில் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாகக்கூறி, 27 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். லட்சுமிபுரத்தை சேர்ந்த கல்யாணி என்பவர் தனது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கேட்டு, அண்ணாநகரை சேர்ந்த ரூபி ஜோசப் என்பவரை அணுகியுள்ளார்.
அந்த நபர், தேசிய மருத்துவ கவுன்சிலில் முக்கிய நபர்களை தெரியும் எனக்கூறி, கல்யாணியிடம் இருந்து சிறுக சிறுக, 27 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார். மருத்துவ சீட் வாங்கித் தராமல் ஏமாற்றியதால், காவல்நிலையத்தில் கல்யாணி புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ரூபி ஜோசப்பை கைது செய்தனர்.
Related Tags :
Next Story