பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி
x

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு செஸ் போட்டி நடந்தது.

அரியலூர்

தாமரைக்குளம்:

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ெசஸ் போட்டி நடைபெற்றது. அரியலூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 22 நடுநிலைப்பள்ளிகள், 14 உயர்நிலைப் பள்ளிகள், 7 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 43 பள்ளிகளில் இருந்து 190 மாணவர்கள், 110 மாணவிகள் என மொத்தம் 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் கலந்து கொள்வார்கள். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களுக்கு, ஒலிம்பியாட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பை பெறுவார்கள்.

இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஜெயங்கொண்டம் வட்டார அளவிலான செஸ் போட்டியை க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, மாணவர்களை வாழ்த்தினார். போட்டியில் வட்டார அளவிலான 34 பள்ளிகளில் இருந்து 198 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், துணை தலைவர் வெ.கொ.கருணாநிதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story