முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை: உற்சாக வரவேற்பு அளித்த திமுக நிர்வாகிகள்


முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை: உற்சாக வரவேற்பு அளித்த திமுக நிர்வாகிகள்
x

மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி திட்டங்கள், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்துகிறார்

மதுரை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரை வந்தார் . சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அவருக்கு அமைச்சர்கள்,மற்றும் , திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் . அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பி.டி.ஆர், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி உடனிருந்தனர் .

இதனைத்தொடர்ந்து கார் மூலம் அழகர்கோவில் ரோட்டில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தபின் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

அவர்களுடன் மு.க.ஸ்டாலின் அரசின் வளர்ச்சி திட்டங்கள், மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்துகிறார்


Next Story