குடும்பத்தினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


குடும்பத்தினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 1 March 2024 6:33 AM GMT (Updated: 1 March 2024 6:56 AM GMT)

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதற்கு முன்பாக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.


Next Story