பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியாவின் (இ.சி.ஐ.) பேராயருமான எஸ்றா சற்குணம் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந் தேதி அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
அதனை தொடர்ந்து அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. எஸ்றா சற்குணம் உடலுக்கு பொதுமக்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், சென்னை வானகரத்தில் எஸ்றா சற்குணம் உடலுக்கு இறுதி மரியாதை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு எஸ்றா சற்குணம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் சென்னை மேயர் பிரியா அஞ்சலி செலுத்தினர்.






