தியாகி சங்கரய்யா உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தியாகி சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தியாகி சங்கரய்யா உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
Published on

சென்னை,

சுதந்திரபோராட்ட தியாகி சங்கரய்யா (வயது 102). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இதனிடையே, உடல்நலக்குறைவு காரணமாக தியாகி சங்கரய்யா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தியாகி சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. தியாகி சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com