திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!


திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!
x
தினத்தந்தி 17 Aug 2023 5:34 AM GMT (Updated: 17 Aug 2023 6:48 AM GMT)

திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் இன்று தனது 61 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், திருமாவளவனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

"இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.

திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "சாதிய - மதவாத - சனாதன சக்திகளுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் சமரசமற்ற போர்க்குரலை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி இந்தியாவை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் - செயல்பாடுகளும் வெல்லட்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story