முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்


முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம்
x

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் 180 மாணவ-மாணவிகள் பயனடைந்து வந்தனர். இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் மீதமுள்ள 263 அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 16 ஆயிரத்து 20 மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் அந்த திட்டம் தொடங்கப்பட்டது.

இதில் வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட லெப்பைக்குடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். மேலும் அவர் மாணவ-மாணவிகளுக்கு ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் மற்றும் இனிப்பு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டதோடு, அவர்களுக்கு உணவையும் ஊட்டி மகிழ்ந்தார்.

தொடக்கப்பள்ளியில்...

அப்போது மாவட்ட கலெக்டர் கற்பகம், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பெரம்பலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்பாடி எறையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் தொடங்கி வைத்தார்.


Next Story