திங்கள்சந்தையில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை ஆர்ப்பாட்டம்


திங்கள்சந்தையில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை ஆர்ப்பாட்டம்
x

திங்கள்சந்தையில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை தலைவர் தியோடர் சாம் தலைமையில் திங்கள்சந்தை பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஜாண்விஜயகுமார், போதகர் ஈசாக், பீட்டர், வக்கீல் அருள் ஸ்டீபன், ராபின்சன் மனுவேல், ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மண்டைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட மாதவிளை பகுதியில் 35 ஆண்டுகளாக செயல்படும் கிறிஸ்தவ வழிபாட்டு ஆலயத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதவிளை ஆலயத்திற்கு எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

மேலும் இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனைத் தலைவர் தியோடர் சேம் கூறுகையில், ஓட்டுக்காக கிறிஸ்தவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். கிறிஸ்தவர்களுக்கு ஒரு பிரச்சினையென்றால் எந்த தலைவர்களுமே வருவது கிடையாது. இதற்கான விடை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தெரியவரும் என்றார்.


Next Story