பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம்

பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம்
Published on

நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொது வினியோகத்திட்ட மக்கள் தொடர்பு முகாம் வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 வரை நடக்கிறது. கீழ்வேளூர் தாலுகாவில் காரப்பிடாகை வடக்கு கிராமம், நாகை தாலுகாவில் கொத்தமங்கலம் (கோதண்டராஜபுரம்), திருக்குவளை தாலுகாவில் வாழக்கரை, வேதாரண்யம் தாலுகாவில் பிரிஞ்சிமூலை ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகள் முகாமில் நடைபெறும் என நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com