பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம்


பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 9 July 2023 12:30 AM IST (Updated: 9 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

திருவாரூர்

குடவாசல் அருகே உள்ள திருக்களம்பூர் ஊராட்சி அலுவலகத்தில் பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு கூட்டுறவு சார் பதிவாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் தங்கதுரை, ஊராட்சி தலைவர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டையில் உள்ள பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் எண் சேர்த்தல், செல்போன் எண் இணைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களிடம் ரேஷன் கடைகளில் அரிசி, சீனி, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் முறைப்படி வினியோகம் செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் கேட்டறிந்தனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் கற்பகம் நன்றி கூறினார்.

1 More update

Next Story