கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை


தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக, விவசாயிகளுக்கு கடன் வழங்குவது, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம், உரம் வினியோகம் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த நிர்ப்பந்திப்பதை கண்டித்து, மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில கவுரவ செயலாளர் ஆசிரியதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ராஜா, செயலாளர் கணேசன், பொருளாளர் பாரூக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், செல்வம், சோம சுந்தரம், சுமதி, நீதி முத்தையா உள்பட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் வாகனங்கள், எந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் வாங்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கப்படும். இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள லாபகரமாக இயங்கும் கூட்டுறவு சங்கங்களில் மட்டும் செயல்படுத்த வேண்டுமென கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். அதை மீறி, மண்டல அளவில் உள்ள உயர்அதிகாரிகள் அனைத்து சங்கங்களிலும், பல்நோக்கு சேவை மையமாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த நிர்ப்பந்திக்கின்றனர். இதுபற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகிற 3-ந்தேதி முதல் ஏற்கனவே திட்டத்தின் வாங்கிய உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு தொடர்விடுப்பில் செல்ல இருக்கிறோம் என்றனர்.


Next Story