கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை


கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - 2 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
x

கோப்புப்படம்

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை,

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் இதில் பலியானார். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபின், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது இத்ரீஸ், தாஹா நசீர் ஆகிய 2 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரையும் சென்னை புழல் சிறையில் இருந்து கோவை முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story