கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு சொந்த ஊரான தேனியில் இறுதிச்சடங்கு


கோவை சரக டிஐஜி விஜயகுமார் உடலுக்கு சொந்த ஊரான தேனியில் இறுதிச்சடங்கு
x
தினத்தந்தி 7 July 2023 8:26 AM GMT (Updated: 7 July 2023 9:47 AM GMT)

தற்கொலை செய்த டிஐஜி விஜயகுமாருக்கு அவரது சொந்த ஊரான தேனியில் இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.


கோவை,

கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இன்று காலையில் தனது பாதுகாவலரின் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்த டி.ஐ.ஜி. விஜயகுமாருக்கு கீதா வாணி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-2 முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்க உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் டி.ஐ.ஜி. தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் வைத்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையினால போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே டி ஐ ஜி விஜயகுமாரின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து நேரில் சென்று விசாரிக்க சட்டம் ஒழுங்கு ஏடி.ஜிபி. அருண் இன்று கோவைக்கு வந்தார். அவர் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டு அறிந்தார். பின்னர் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அரங்கில் வைக்கப்பட்டிருந்த டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்குக் காரணம் மன அழுத்த பிரச்சினை தான். கடந்த சில ஆண்டுகாலமாகவே அவர் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக விஐயகுமார் சிகிச்சையையும் பெற்று வந்தார்.

மன அழுத்தம் வேறு மன உளைச்சல் வேறு என்று கூறிய ஏடிஜிபி, குடும்பத்திலோ, பணியிலோ அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அருமையான குடும்பம். பணியில் திறம்பட செயல்பட்டார். காவல்துறையினருக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர்.

2 ஆண்டுகாலமாக அவர் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மருத்துவரிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். டிஐஜி விஜயகுமார் யாரும் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

விஐயகுமாருக்கு எந்த மாதிரியான மன அழுத்தம் இருந்தது என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்றும் அருண் தெரிவித்தார். எஸ்.பி, காவல்துறை உயரதிகாரிகளிடம் தனது மன அழுத்த பிரச்சினையை கூறி ஆலோசனை பெற்றுள்ளார் எனவே விஜயகுமாருக்கு மன அழுத்த பிரச்சினை இருந்தது உறுதியாகியுள்ளது.

காவல்துறையில் திறம்பட பணியாற்றியவர். ஐபிஎஸ் அதிகாரியாக ஆவதற்கு முன்பே காவல்துறையில் பணியாற்றியுள்ளார். குடும்பத்திலோ, பணியிலோ அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எந்த மாதிரியான மன அழுத்தம், எதனால் ஏற்பட்டது என்று மருத்துவர்களிடம் கேட்டு வருகிறோம் எனவே விஐயகுமார் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனியில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தமிழக அரசின் அமரர் ஊர்தி மூலம் டிஐஜி விஜயகுமார் உடன் கொண்டு செல்லப்பட்டது.

தேனி ரத்தினம் நகரில் வசிக்கும் விஜயகுமாரின் பெற்றோர் இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விஜயகுமார் (வயது 45) போடிநாயக்கனூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.


Next Story