தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் அருணா வழங்கினார்


தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் அருணா வழங்கினார்
x
சென்னை

சென்னை,

சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு திருமணம், மகப்பேறு, கல்வி உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகை ஆகியவற்றுக்கான காசோலையை கலெக்டர் அருணா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி அனுசியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரஸ்வதி, தாட்கோ மாவட்ட மேலாளர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்ட தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெறலாம் என்றும், இதுவரை உறுப்பினர் அடையாள அட்டை பெறாதவர்கள் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தின் 2-ம் தளத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

அரசு, அரசு சார்ந்த, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் பயன்பெற இயலாது என்றும் அறிவித்துள்ளார்.


Next Story