கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவு


கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை முடிக்க கலெக்டர் உத்தரவு
x

மழைக்காலத்திற்கு முன்பே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் கால்வாய் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் குழாய்களை முறையாக கழிவுநீர் கால்வாய்க்கு வெளிப்பகுதியில் சேதம் இல்லாமல் அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சாலையின் இருபுறங்களிலும் கழிவுநீர் தேங்காத வகையில் முழுமையாக தூர்வாரி கடைக்கோடி பகுதி வரை கழிவு நீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழைக்காலங்களில் பெரம்பலூர் மாவட்டத்தின் நகர பகுதிகளிலும், ஊரக பகுதிகளிலும் எங்குமே கழிவு நீர் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் முறையாக தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கொசுக்கள் உருவாகாத வகையில் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கலைவாணி, பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story