நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு


நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
x

பெரம்பலூர் அருகே நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் தாலுகா அருமடல் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் தங்களின் விவசாய நிலத்திற்கு அருகே உள்ள நீரோடையினை சிலர் அடைத்து வைத்திருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் வயல்களில் புகுந்து பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுவதாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தனர். இதையடுத்து, மாவட்ட கலெக்டர் கற்பகம் அருமடல் கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலையோரம் உள்ள வயலில் இருந்து, நீரோடை அடைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட பகுதி வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு நடந்தே சென்று நீரோடையின் வழித்தடத்தை பார்வையிட்டார். பின்னர் நீரோடையில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் உடனடியாக அகற்றிடவும், நீரோடையை தூர் வாரி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதேபோல் செங்குணம் பகுதியில் உள்ள குளத்திற்கு நீர் வரத்து வரும் பாதைகளை சரி செய்து தரக்கோரி அளிக்கப்பட்ட மனுவைத்தொடர்ந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நீர் வரத்திற்கான பாதைகளை சரி செய்து தர அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story