தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை
தாய் கண்டித்ததால் கோபம்: அடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போடடு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் காட்டுத் தோட்டம் கார்மல் நகரை சேர்ந்தவர் நாராயணன் (வயது49). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர்களுடைய மகள் பிரீத்தி (19). இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் வீட்டில் தாயும், மகளும் மட்டும் இருந்துள்ளனர். அப்போது பிரீத்தி பக்கத்து வீட்டுக்கு சென்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை ஜெயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த பிரீத்தி தன் அறைக்கு சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரீத்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.