ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவர் தற்கொலை
x

குடியாத்தம் அருகே, பெற்றோரை அழுத்து வருமாறு கூறியதால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர்

குடியாத்தம் அருகே, பெற்றோரை அழுத்து வருமாறு கூறியதால் விரக்தி அடைந்த கல்லூரி மாணவர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

குடியாத்தத்தை அடுத்த லத்தேரி ரெயில் நிலையம் பகுதியில் சுமார் 20 வயது மதிக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு ஓடும் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் தாலுகா திருமணி பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் அருண்குமார் (வயது 20) என்பதும், இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.

ரெயில்முன் பாய்ந்து தற்கொலை

மேலும் கடந்த 20-ந் தேதி கல்லூரிக்கு சென்ற அருண்குமாரை கல்லூரி நிர்வாகம் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இது குறித்து வீட்டில் தகவல் தெரிவிக்காமல் அருண்குமார் இருந்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி நிர்வாகத்தின் மூலம் இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த அருண்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story