கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவர் தற்கொலை
Published on

பெத்தநாயக்கன்பாளையம்:

பெத்தநாயக்கன்பாளையம் கருமந்துறையை சேர்ந்தவர் புவனேஷ்வரன் (வயது 20). இவர் ஆத்தூர் காட்டுக்கோட்டை கல்லூரியில் படித்து வந்தார். இந்தநிலையில் புவனேஷ்வரன் கடந்த 5-ந் தேதி திடீரென வீட்டில் விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இந்த தற்கொலை குறித்து கருமந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com