பஸ்சின் மேற்கூரையில் அமா்ந்து ஆபத்தான பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்


பஸ்சின் மேற்கூரையில் அமா்ந்து ஆபத்தான பயணம் செய்யும் கல்லூரி மாணவர்கள்
x
தினத்தந்தி 7 July 2023 1:54 AM IST (Updated: 7 July 2023 1:54 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டை- திருச்சி வழித்தடத்தில் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து கல்்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு:

பட்டுக்கோட்டை- திருச்சி வழித்தடத்தில் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்து கல்்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கல்லூரிகள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து திருவோணம், கல்லாக்கோட்டை, கந்தர்வகோட்டை, செங்கிப்பட்டி வழியே திருச்சிக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள கல்லாக்கோட்டை, கந்தர்வகோட்டை, செங்கிப்பட்டி, திருவெறும்பூர், திருச்சி ஆகிய ஊர்களில் அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழில் பயிற்சி நிலையம் போன்றவைகள் செயல்பட்டு வருகின்றன இவைகளில் பயின்று வரக்கூடிய மாணவர்கள், இதேபோல் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் கந்தர்வகோட்டை, செங்கிப்பட்டி, திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு தினமும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர்.

ஆபத்தான பயணம்

ஆனால் இந்த வழித்தடத்தில் குறைவான பஸ்கள் இயக்கப்படுவதால், குறிப்பிட்ட நேரங்கள் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக காலை, மாலை நேரங்களில் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

குறிப்பாக சுபமுகூர்த்த நாட்களில் இந்த வழித்தடத்தில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்களின் மேற்கூரையில் அமர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

கூடுதலாக பஸ்கள் இயக்க வேண்டும்

இந்த ஆபத்தான பயணத்தை பஸ்சில் கூட்டம் இல்லாத சில நேரங்களிலும் கல்லூரி மாணவர்கள் தொடர்வது நடந்து வருகிறது. அப்போது மாணவர்கள் பஸ்சின் மேற்கூரையில் அமர்ந்தவாறு சத்தமிட்டு கூச்சலிடுகின்றனர்.

எனவே இந்த வழித்தடத்தில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி போக்குவரத்து வசதியினை பெறும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story