மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 5 July 2023 12:15 AM IST (Updated: 5 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார்.

கன்னியாகுமரி

புதுக்கடை:

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலியானார்.

என்ஜினீயர்

புதுக்கடை அருகே உள்ள தோட்டவாரம் பகுதியை சேர்ந்தவர் குஞ்சு கிருஷ்ணன். இவருடைய மகன் அருண் (வயது24), டிப்ளமோ என்ஜினீயரிங் பட்டதாரி. இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அருண் மோட்டார் சைக்கிளில் புதுக்கடை அருகே உள்ள கரையான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மாராயபுரம் வட்டவிளையை சேர்ந்த கொத்தனார் ஷாஜி (28), அவருடைய நண்பர் குன்னத்தூரை சேர்ந்த மார்ட்டின் விமல் (28) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

எதிர்பாராத விதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதின. இதில் அவற்றில் பயணம் செய்த அருண், ஷாஜி உள்பட 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

பரிதாப சாவு

விபத்து நடந்ததும் அப்பகுதியில் நின்றவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்படி அருண் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியிலும், ஷாஜி மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், மார்ட்டின் விமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் அருண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story