தெருவோரக் கடைகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளதா? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி


தெருவோரக் கடைகளுக்கான குழு அமைக்கப்பட்டுள்ளதா?  தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 11 July 2023 4:30 PM IST (Updated: 11 July 2023 4:50 PM IST)
t-max-icont-min-icon

தெருவோர கடைகளை அமைப்பதற்கான இடம் தமிழ்நாட்டில் அனைத்து நகராட்சிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருவோர கடைகளில் வாடகை வசூல் செய்யும் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தெருவோர கடைகளுக்கான சட்டம், விதிமுறைகளை மீறி எத்தனை நகராட்சியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

தெருவோர கடைகளுக்கான குழு தமிழ்நாட்டின் அனைத்து நகராட்சிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி, சான்றிதழ் வழங்காமல், தெருவோர கடைகளுக்கான எண்ணிக்கை இல்லாமல், வாடகை நிர்ணயம் செய்யாமல் எவ்வாறு ஒப்பததாரர் பணம் வசூலிக்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தெருவோர கடைகளை அமைப்பதற்கான இடம் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 27-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.



Next Story