இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை
மணல் குவாரி கொள்ளைகளை தடுத்து நிறுத்தக்கோரி திருக்கடையூர் அருகே ஆக்கூர் முக்கூட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கண்டன உரையாற்றினார். மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெல் மற்றும் உளுந்து பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story