கோவில் அர்ச்சகர்கள் தாக்கியதாக ஆவடி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு


கோவில் அர்ச்சகர்கள் தாக்கியதாக ஆவடி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
x

கோவில் அர்ச்சகர்கள் தாக்கியதாக ஆவடி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு தமிழ்வழி கல்வி இயக்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு, சீனிவாசா நகர், நம்பிக்கை தெருவை சேர்ந்தவர் மணிசேகரன் (வயது 58). இவர், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்வழி கல்வி இயக்கத்தின் பொருளாளராக உள்ளார். இவர், நேற்று காலை நிர்வாகிகளுடன் ஆவடி போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடதிருமுல்லைவாயலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு நகலை இணைத்து, அந்த கோவில் அதிகாரியிடம் நான் மற்றும் ஆவடி நாகராசன், சிவனடியார்கள் வடிவேலன், சுகுமார் ஆகியோர் வலியுறுத்தினோம். அதன்பிறகு ஒரு கால பூஜையாவது தமிழில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மீண்டும் கோவிலுக்கு சென்றோம்.

அப்போது அங்கிருந்த அர்ச்சகர்கள் எங்களை சூழ்ந்து கொண்டு தாக்கினர். இது தொடர்பாக திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story