காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசாரம்
கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரசாரம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி புதுக்கிராமம் மெயின் ரோட்டில் நகர காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைராஜ், பொதுச்செயலாளர் எம். முத்து, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் ்ராஜசேகரன், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை, வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.காமராஜ், எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மாநில தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொதுச்செயலாளர் சிவப்பிரகாசம், அமைப்பு சாரா பிரிவு மாவட்ட தலைவர் ஜோஸ்வா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
Related Tags :
Next Story