காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராகுல்காந்திக்கு வழங்கப்பட்டுள்ள 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசல மன்றம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் ரெக்ஸ், மாநில பொதுச் செயலாளர்முரளி, கோட்டத்தலைவர் ராஜா டேனியல்ராய், மாவட்ட பொதுச் செயலாளர்கள் சரவணசுந்தர், மாணிக்கவாசகம், சிவா உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ராகுல்காந்தி மீதுள்ள வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும், மத்திய அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் மணப்பாறை யை அடுத்த வையம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர்.