காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
ராகுல் காந்திக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்டதை கண்டித்து சிவகாசி பஸ் நிலையம் எதிரில் முன்னாள் கவுன்சிலர் கணேசன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாநகர தலைவர் சேர்மத்துரை, ஒன்றிய கவுன்சிலர் ஜீ.பி.முருகன், கவுன்சிலர்கள் ரவிசங்கர், தனலட்சுமி காசி, மகேஸ்வரி, மாணவர் காங்கிரஸ் ஷேக், முத்துமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சாத்தூரில் நகர தலைவர் அய்யப்பன் தலைமையில் அக்கட்சியினர் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல ராகுல் காந்திக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்டதையொட்டி கண்டித்து ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் சாலை மறியல் செய்வதற்காக கட்சி அலுவலகம் நேரு பவனத்தில் இருந்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் நகர காங்கிரஸ் தலைவர் சங்கர் கணேஷ் உள்பட காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை ரவுண்டானா முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 27 பேரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.