காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்


காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டுமனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பையும், பழிவாங்கும் போக்கில் செயல்படும் பா.ஜ.க. அரசை கண்டித்தும் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பஸ் நிறுத்ததில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். நகர தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சாலை மறியல்

திருப்பத்தூர் நகர காங்கிரஸ் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் பாரத், தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் பிரதமர் மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் கிருஷ்ணகிரி- வாணியம்பாடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் வெங்கடேசன், நெடுமாறன், விஜயராகவன், ஒன்றிய தலைவர்கள் ஜாவித், தண்டபாணி, சாந்தசீலன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆம்பூர்

ஆம்பூர் பஸ்நிலையம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நகர தலைவர் சரவணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்தசம்வத்தால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாணியம்பாடி

வாணியம்பாடி பஸ்நிலையம் அருகே காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் தபரேஷ்அஹமத், ஆலங்காயம் ஒன்றிய தலைவர் பழனி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்கள் கதீர்அஹமத், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொது செயலாளர் அனுமுத்து, மாவட்ட செயலாளர்கள் கோபால், ராஜீவ்காந்தி, ராஜா, பிரபு, கஜேந்திரன் உள்ளிட்டோர் கண்டன ஆர்பாட்டம் செய்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதாக 25 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.


Next Story