கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வுசெய்தார்.
திருப்பத்தூர்
ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு ஊராட்சியில் பேரணாம்பட்டு செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய், கல்வெட்டாக அமைந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த கழிவுநீர் கால்வாயை அகலப்படுத்தி தங்குதடையின்றி கழிவுநீர் செல்லும் வகையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.
இதனை மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் போக்குவரத்து அதிகமுள்ள இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாகணேஷ், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story