ரூ.55 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி

உதயேந்திரம் பகுதியில் ரூ.55 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.
ரூ.55 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணி
Published on

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட குந்தாணிமேடு பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருப்பதாக அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சாலை அமைக்கும் பணிகளை உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமான முறையில் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் ரேவதி, பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆ.செல்வராஜ் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com