கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி திடீர் சாவு
ஏலகிரி மலையில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளி திடீர் எனண இறந்தார்.
திருப்பத்தூர்
ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (வயது 34). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கனிமொழி என்ற மனைவி உள்ளார். நரேஷ் கட்டிட வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் வழக்கம் போல நேற்று காலை இவர் வீட்டிலிருந்து 8 மணிக்கு ஏலகிரி மலை அத்தனாவூர் பகுதியில் கட்டிட பணிக்கு சென்றார். அங்கு கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென கீழே சாய்ந்து விழந்துள்ளார். அவரை அத்தனாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.
Related Tags :
Next Story