கட்டுமான தொழிலாளர்கள் 18-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு


கட்டுமான தொழிலாளர்கள் 18-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு
x

கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர்கள் 18-ந்தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட கட்டுமான மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கட்டுமான சங்கத்தின் மாநில பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அகஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் 35, 36, 37-வது வாரிய கூட்ட முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும். மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் வருகிற 18-ந்தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story