பூந்தமல்லி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட பணிகள்


பூந்தமல்லி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட பணிகள்
x

பூந்தமல்லி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம்

பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட அம்மா நகர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஸ்ரீராம் நகர் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் என 2 இடங்களில் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி, பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பாரிவாக்கம் சுடுகாட்டில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையில் குப்பைகளை தரம் பிரிக்கும் பனி, பூந்தமல்லி பஸ் நிலையத்திற்கு தினமும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் கழிவறை வசதி குறைந்து காணப்பட்டது இதனால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறைகள் கட்டும் பணியும், பூந்தமல்லி ஜேம்ஸ் தெருவில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு பணியாளர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் தங்கும் அறை மற்றும் கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது என நகர மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தெரிவித்தார். உடன் நகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.


Next Story