தாளவாடியில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
தாளவாடியில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
தாளவாடி
தாளவாடியில் உள்ள பழைய தாலுகா அலுவலகத்தில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். இதில், 'தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பது குறித்தும், உணவு பண்டங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்து, அதை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஐமன் ஜமால், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மு.இலாஹிஜான், சத்தியமங்கலம் புலிகள் காப்பக இயக்குனர் வெங்கடேஷ் பிரபு, ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திரகுமார் மீனா, குடிமைப்பொருள் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், கர்நாடகா மாநில சாம்ராஜ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் யோகானந்தா மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.