சூளகிரி அருகேகன்டெய்னர் லாரி விபத்தில் சிக்கியதுபோக்குவரத்து பாதிப்பு

சூளகிரி அருகே கன்டெய்னர் லாரி மீது சேசிஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூளகிரி அருகேகன்டெய்னர் லாரி விபத்தில் சிக்கியதுபோக்குவரத்து பாதிப்பு
Published on

சூளகிரி

பெங்களுருவில் இருந்து நேற்று கிருஷ்ணகிரி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சென்றது. சூளகிரி அருகே ஒட்டயனூர் பகுதியில் அந்த வழியாக வந்த சேசிஸ் (பாடி கட்டாத) லாரி ஒன்று கன்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்து காரணமாக ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீசார் அங்கு சென்று விபத்துக்குள்ளான லாரிகளை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்த சீரமைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com