சமையல் மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை

ஆரணி அருகே சமையல் மாஸ்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 49), சமையல் மாஸ்டர். இவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட முத்துவுக்கு விஜயராணி என்ற மனைவியும், அரிகரன் என்ற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





