மாநகராட்சி டிரைவர் கார் மோதி சாவு

மாநகராட்சி டிரைவர் கார் மோதி பலியானார்.
மாநகராட்சி டிரைவர் கார் மோதி சாவு
Published on

திருச்சி புத்தூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் செந்தில்ராஜ் (வயது 48). மாநகராட்சி நகர பொறியாளரின் கார் டிரைவராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். மாநகராட்சி அலுவலக வாயிலில் இருந்து வெளியே வந்து எதிர்ரோட்டில் வலது பக்கமாக திரும்பும் போது ஒத்தக்கடை முத்தரையர் சிலை பகுதியில் இருந்து வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செந்தில்ராஜ் படுகாயமடைந்தார். உடனே அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செந்தில்ராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com