அங்கன்வாடி ஊழியரிடம் கவரிங் சங்கிலி பறிப்பு

அங்கன்வாடி ஊழியரிடம் கவரிங் சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
அங்கன்வாடி ஊழியரிடம் கவரிங் சங்கிலி பறிப்பு
Published on

நடந்து சென்றபோது...

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்பாபு. இவரது மனைவி மலர்விழி (வயது 42). இவர் வெங்கடேசபுரம் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். மலர்விழி நேற்று மதியம் அங்கன்வாடி மையத்தில் பணியை முடித்துக்கொண்டு பெரம்பலூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்றார்.

அவருடன் அரணாரை அங்கன்வாடி மைய ஊழியர் சாந்தியும்(34) நடந்து சென்றார். மதியம் 2.55 மணியளவில் தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளியின் பின்புறம் உள்ள உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம் (ஏ.இ.ஓ.) அருகே அவர்கள் சென்ற கொண்டிருந்தனர்.

மொபட்டில் வந்த மர்மநபர்

அப்போது அந்த வழியாக பின்னால் மொபட்டில் வந்த மர்ம நபர் ஒருவர் மலர்விழி கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதனை கண்டு மலர்விழி அதிர்ச்சியடைந்தார். சக அங்கன்வாடி ஊழியர்கள் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த விசாரணை நடத்தினர். இதில் மர்மநபர் பறித்துச்சென்றது கவரிங் சங்கிலி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி, அந்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com