அமித் ஷா வந்ததும் சென்னையில் கரண்ட் கட் விவகாரம்: அது தற்செயலாக நடந்தது - அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி


அமித் ஷா வந்ததும் சென்னையில் கரண்ட் கட் விவகாரம்:  அது தற்செயலாக நடந்தது -  அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி
x
தினத்தந்தி 12 Jun 2023 11:42 AM IST (Updated: 12 Jun 2023 11:44 AM IST)
t-max-icont-min-icon

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை தற்செயலாக நடந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி அளித்துள்ளார்.

சென்னை

வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அப்போது, தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்களைப் பார்ப்பதற்காக விமான நிலைய வாயில் அருகே காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறினார். அப்போது மின்தடை ஏற்பட்டது.

எனினும், வாகனத்தில் இருந்து இறங்கிய அமித் ஷா, சிறிது தூரம் நடந்து சென்று, தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். பின்னர், காரில் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குப் புறப்பட்டார்.

அவர் சென்றவுடன், பாஜகவினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டமிட்டு மின்தடை ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, போலீஸாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில்,

மின் வெட்டு தொடர்பான அமித்ஷாவின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை தற்செயலாக நடந்தது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது என்றார்.

1 More update

Next Story