பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள்; நாளை மறுநாள் நடக்கிறது


பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள்; நாளை மறுநாள் நடக்கிறது
x

பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டிகள் நாளை மறுநாள் நடக்கிறது.

அரியலூர்

மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. போட்டிகள் 13, 15, 17 வயதிக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடைபெறும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்கள் சொந்த செலவில் சைக்கிள் கொண்டு வருதல் வேண்டும், போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு வர வேண்டும். வயது சான்றிதழ் பள்ளி தலைமையாசிரியரிடம் இருந்து பெற்று வருதல் வேண்டும். தங்களது ஆதார் அட்டை நகல் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிகளில் நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கோ தனிப்பட்ட பொது இழப்புகளுக்கோ பங்குபெறும் மாணவ-மாணவிகளே பொறுப்பு ஏற்கவேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பித்த பின்னரே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரம், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரம், 15, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரம், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரம் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4 முதல் 10 இடம் வரை பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதம் காசோலையாக வழங்கப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703499 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story