புயல் முன்னெச்சரிக்கை; சென்னையில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தல்


புயல் முன்னெச்சரிக்கை; சென்னையில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த அறிவுறுத்தல்
x

அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 4-ம் தேதி வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக சென்னையில் கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. உயர் கட்டட கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தவும், கட்டுமானப் பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும் மாநகராட்சி மண்டல துணை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story