தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம் புகழூர் ெரயில்வே கேட்டில் இருந்து கரைப்பாளையம் செல்லும் பகுதியில் உள்ள வெல்லம் தயாரிக்கும் ஆலை அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதாலும், தரமற்ற மின் கம்பம் நடப்பட்டதாலும் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், புகழூர்.


கிடப்பில் போடப்பட்ட தார்சாலை பணி

கரூர் மாவட்டம், நெய்தலூர் ஊராட்சி பனையூரில் இருந்து நச்சலூர் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலைக்காக ஜல்லிக்கற்கள் கொட்டி நிரவப்பட்டு மேலும் பணிகள் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டு பதியில் உள்ளது.தற்போது அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் நச்சலூர் இருந்து பனையூருக்கு தினமும் சென்று வருகின்றன. அந்த தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு வருகின்றனர். இதனால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை பணியை விரைவில் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நச்சலூர்.

வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம் ஜெகதாபியில் செயல்படும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி கரூர் மணப்பாறை சாலையில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 1,300 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் பஸ், வேன் மூலமாகவும், அருகிலிருக்கும் ஊர்களை சேர்ந்த மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தும் விட்டு செல்கின்றனர். இதனால் காலையில் பள்ளி கூடும் நேரத்திலும், மாலையில் பள்ளி விடும் நேரத்திலும் நுழைவு வாயில் பகுதியில் உள்ள சாலையில் அதிகமான மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் கூட்டம் இருக்கும். இந்தநிலையில் எந்நேரமும் சாலையில் அதிக வேகத்தில் செல்லும் லாரி, பஸ், வேன், கார், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை சாலையில் பஸ் ஏறவும் இறங்கவும் குறுக்கே செல்லும் மாணவ-மாணவிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்த கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


புதா்மண்டி கிடக்கும் கிணறு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பழைய பெட்ரோல் விற்பனை நிலையத்தின் வடக்கு பகுதியில் இருந்து கரூர் செல்லும் சாலையின் கீழ்பாகத்தில் 100அடி ஆழத்தில் பயண்படுத்தாத கிணறு ஒன்று புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், அரவக்குறிச்சி.

தேங்கிநிற்கும் கழிவுநீர்

கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் இருந்து ரெட்டியபட்டி செல்லும் சாலை இடது புறம் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தரகம்பட்டி.

1 More update

Next Story