குண்டும், குழியுமான காவிலிபாளையம்-கணியாம்பூண்டி சாலை


குண்டும், குழியுமான காவிலிபாளையம்-கணியாம்பூண்டி சாலை
x
தினத்தந்தி 9 July 2023 6:30 PM IST (Updated: 10 July 2023 12:55 PM IST)
t-max-icont-min-icon

காவிலிபாளையம்-கணியாம்பூண்டி சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்குட்பட்ட காவிலிபாளையத்தில் இருந்து கணியாம்பூண்டி செல்லும் சாலையை தினமும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நீண்ட நாட்களாக அந்த சாலை சீரமைக்காமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையில் உள்ள பள்ளங்களில் நிரம்பி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தினமும் அந்த வழியாக செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைப்பதுடன், அங்கு சாக்கடை கால்வாய் அமைத்து கழிவுநீர் சாலையில் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story