சேதமடைந்த தார்ச்சாலையால் மக்கள் கடும் அவதி

தஞ்சை சோழன்நகர் ஹவுசிங் யூனிட் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை மோசமாக காட்சி அளிக்கிறது. அதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சேதமடைந்த தார்ச்சாலையால் மக்கள் கடும் அவதி
Published on

தஞ்சாவூர்;

தஞ்சை சோழன்நகர் ஹவுசிங் யூனிட் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை மோசமாக காட்சி அளிக்கிறது. அதனை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சோழன்நகர் குடியிருப்பு வாசிகள்

தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்பகுதியில் உள்ளது சோழன்நகர் ஹவுசிங் யூனிட். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறம் 84 வீடுகள் கடந்த 2015-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி தற்போது 84 வீடுகளிலும் மக்கள் வசித்து வருகிறார்கள்.

மோசமாக காட்சி அளிக்கும் சாலை

இங்கு விமானப்படையில் வேலை பார்க்கும் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் குடியிருந்து வருகிறார்கள். இந்த வீடுகளுக்கு செல்வதற்கு தஞ்சை- திருச்சி சாலையில் இருந்து பிரிந்து இணைப்பு சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த பகுதி தஞ்சை ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகருக்குசெல்லும் இணைப்பு தார்சாலை முற்றிலும் சேதம் அடைந்து நடக்க கூட முடியாமல் உள்ளது.இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் இந்த சாலையில் மிகவும் சிரமப்பட்டு நடந்து சென்று வருகிறார்கள். பள்ளி வாகனத்திற்கு மெயின் சாலைக்கு வந்து ஏறி செல்கிறார்கள். மேலும் வேலைக்கு செல்பவர்களும், மிகவும் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் அடிக்கடி இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனஙக்ளும் பழுதாகி விடுகிறது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த இணைப்பு சாலையையும், அனைத்து சாலைகளையும் சீர் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com