தாமிரபரணி ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை


தாமிரபரணி ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை
x

நெல்லை தாமிரபரணி ஆற்றில் அபாய எச்சரிக்கை பலகை நிறுவப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர். ஆற்றில் சில இடங்களில் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கி விடுகின்றனர்.

இத்தகைய உயிரிழப்புகள் சம்பவத்தை தடுக்க ஆழமான பகுதிகள் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் எதிரே தாமிரபரணி ஆற்றங்கரையில் வெளியூர் பயணிகள் கவனமாக ஆற்றில் இறங்கி குளிக்கும் வகையில் அபாய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அதன்படி நெல்லை மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நேற்று கொக்கிரகுளம் ஆற்றுக்குள் கல் மண்டபம் அருகே 'அபாய பகுதி ஆற்றுக்குள் இறங்காதீர்கள்' என்ற எச்சரிக்கை பலகை நிறுவப்பட்டது அதில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகம் எழுதப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அபாயமான பகுதிகள் குறித்த எச்சரிக்கை பலகைகள் கூடுதலாக அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story