சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்


சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்
x

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், அனுமன் ஜெயந்தியையொட்டி சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ரவி அவர்கள் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கி, மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெறவும், நமது மாநிலம் மற்றும் தேசம் அமைதியும் வளமும் பெறவும் பிரார்த்தனை செய்தனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story